ஆன்மிகம்இன்றைய ராசி பலன்

நினைத்த காரியத்தை முடிக்கும் நாள்: இன்றைய ராசிபலன்

சோபகிருது வருடம் தை மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 9.02.2024, சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 07.52 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. இன்று அதிகாலை 01.50 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.
மிருகசீரிடம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷம்
ஆன்லைன் வர்த்தகங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எந்த வகையிலாவது தொழிலை முன்னேற்றமடைய செய்வீர்கள். வியாபாரத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவீர்கள். உறுதியான செயல் திறனால் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வீடு கட்டுவதற்கான திட்டம் தீட்டி பணம் திரட்ட முயல்வீர்கள்.

ரிஷபம்
ரிஷபம்
தடைபட்டு நின்ற திருமண பேச்சு வார்த்தைகளை திறம்பட முடிப்பீர்கள். இல்லத்தரசியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் படிப்புக்காக அரசியல் பிரமுகரின் உதவியை நாடுவீர்கள். வெளியூர் பயணங்களால் புதிய முதலீடுகளை பெறுவீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் எதிர்பாராத லாபம் அடைவீர்கள்.

மிதுனம்
மிதுனம்
எந்த செயலிலும் முந்தி நிற்காதீர்கள். தேவையில்லாத சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆட்படுவீர்கள். கொடுத்த இடங்களில் பணவரவு தாமதமாவதால் தடுமாற்றம் அடைவீர்கள். எடுத்த காரியத்தில் ஏதாவது ஒரு இடையூறை சந்திப்பீர்கள். குடும்பப் பிரச்சினையால் குழப்பம் அடைவீர்கள். இன்று சந்திராஷ்டம நாள். கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

கடகம்
கடகம்
சாதுரியமாக பேசி சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் நம்பி இறங்குவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் நல்ல பலனை காண்பீர்கள். கணவன் மனைவி உறவை கலகலப்பாக மாற்றுவீர்கள். பார்ட்னர்களுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்துக் கொள்வீர்கள்.

சிம்மம்
சிம்மம்
நீண்ட தூர பயணங்களின் போது வாகனங்களில் பழுது ஏற்பட்டு சரி செய்வீர்கள். உங்களை வீழ்த்த நினைக்கும் எதிரிகளை தைரியத்தோடு சந்திப்பீர்கள். தொழிலுக்கு திடீரென்று தோன்றிய எதிர்ப்பை தரைமட்டமாக்குவீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் உற்பத்தியில் சுணக்க நிலையை காண்பீர்கள்.

கன்னி
கன்னி
பண பற்றாக்குறையால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவீர்கள். அலைச்சல் அதிகமானாலும் வெளியூர் பயணங்களால் அதிக பயன் அடைய மாட்டீர்கள். சாலையில் நிறுத்தும் வாகனத்தை பூட்டிவிட்டு செல்ல மறக்காதீர்கள். வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். கண்ட இடத்தில் சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உறவினர்களிடம் அளந்து பேசுங்கள்.

துலாம்
துலாம்
மரியாதைக்குரிய நபரின் நட்பு கிடைத்து சந்தோசப்படுவீர்கள். அவர் மூலமாக அரசாங்க வேலைகளில் அனுகூலம் அடைவீர்கள். வியாபாரத்தில் மிகுந்த லாபம் பார்ப்பீர்கள். தொழில் துறைகளில் இருந்த இடையூறுகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்
விருச்சிகம்
முட்டுக்கட்டைகளை தாண்டி தொழிலை விரிவுப்படுத்துவீர்கள். சகோதர உறவுகளால் சச்சரவுகளில் மாட்டிக் கொள்வீர்கள். ஏற்கனவே இருந்த சொத்து பிரச்சனையில் இழுபறியான நிலை நீடிப்பதால் நீதிமன்றம் செல்வீர்கள். தொழிலில் தைரியமாக முதலீடு செய்வீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்த தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

தனுசு
தனுசு
வாக்கு வன்மையால் குடும்ப சிக்கலை தீர்ப்பீர்கள். கூட்டுத் தொழிலுக்கான பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். வெளிநாடு போவதற்கான ஏற்பாடு செய்வீர்கள். உறவினரிடம் அணுக்கமாக நடந்து கொள்வீர்கள். விட்டுப் போன நட்பை புதுப்பித்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள். வீட்டுக் கடனை அடைப்பீர்கள்.

மகரம்
மகரம்
எவ்வளவுதான் சிக்கனமாக இருந்தாலும் செலவுகள் கை மீறி போவதால் கவலைப்படுவீர்கள். அடுத்தவருக்காக கடன்பட்டு அவஸ்தைப்படுவீர்கள். வியாபாரத்தில் சில இடையூறுகளை சந்திப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் சாதகமாக அமையாது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வந்து மன நிம்மதி இழப்பீர்கள். ஊழியர் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதை உணர்வீர்கள்.

கும்பம்
கும்பம்
தேவையில்லாத அலைச்சல் வந்து சிரமப்படுவீர்கள். கையில் இருக்கும் காசு கரைந்து கடன் வாங்குவீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் போட்டியால் பாதிக்கப்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமல் தலைகுனிவு அடைவீர்கள். ஆன்லைன் சூதாட்டத்தின் பக்கம் தலை வைக்காதீர்கள். நரம்பு தளர்ச்சி நோய்க்கு வைத்தியம் பார்ப்பீர்கள்.

மீனம்
மீனம்
நீண்ட காலமாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து மகிழ்ச்சி அடைவீர்கள். வேலை செய்யும் இடங்களில் முதலாளியின் பாராட்டை வெகுமதியாக பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரித்து கையிருப்பு கூடுவதால் நகை வாங்குவீர்கள். தொழிலில் காட்டும் சுறுசுறுப்பால் மற்றவர்களை வியக்க வைப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

Back to top button