புளூம்பெர்க் இணையத்தளம் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இந்திய அரசு நாளை வெளியிட வாய்ப்புள்ளதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பில் நெருக்கமாக ஈடுபட்டுள்ள இந்திய அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி, ப்ளூம்பெர்க் இணையத்தளம் இதுவரை எந்தக் கூடுதல் தகவலும் வெளியிடப்படவில்லை என்று கூறியுள்ளது.
இதேவேளை, கடந்த 12 மணித்தியாலங்களில் சாதகமான பதில்கள் கிடைத்துள்ள நிலையில், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை இலங்கை பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை இலங்கைக்கான கடன் திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்னர், சீனா, ஜப்பான் மற்றும் பாரிஸ் கிளப் உறுப்பு நாடுகளிடமிருந்து கடன் மறுசீரமைப்பு சான்றிதழை இலங்கை பெற வேண்டும். இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.