சுவையான சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல்…. வெறும் 5 நிமிடம் போதும்!
எப்போதும் கத்தரிக்காய் வைத்து குழம்பு செய்து தான் பார்த்திருப்போம். ஆனால் கத்தரிக்காய் வைத்து சட்டு அதை சம்பல் செய்து சாப்பிட்டுள்ளீர்களா? அதன் சுவை பற்றி சரி தெரியுமா?
ஆம். வீட்டில் எப்போதும் ஒரு மாதிரியே கறி வைத்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக இதை செய்து சாப்பிட்டு பாருங்க. சோறு, முருங்கைக்காய் பால்கறி, மீன் குழம்பு, சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல் சேர்த்து சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட்டுக்கொண்டே தான் இருப்பீர்கள்.
ஆகவே வெளியில் சென்று இதை சாப்பிடாமல் வீட்டிலேயே எப்படி இலகுவாக செய்து சாப்பிடலாம் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
1 சுட்ட கத்தரிக்காய்
2 பச்சைமிளகாய்
6-10 சின்ன வெங்காயம்
கருவேப்பிலை சிறிதளவு
உப்பு தூள் தேவையான அளவு
50- 75 மி.லீ தேங்காயின் முதற்பால்
1/2 சிறிய எலுமிச்சம் பழம்
செய்முறை
முதலில் அடுப்பில் வைத்து கத்தரிக்காயை சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது கத்தரிக்காயின் மேல் தோல் உரிந்து வரும் வேளையில் கத்திரக்காயில் இருந்த தோல் பகுதியை நீக்கி சதை பகுதியை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
பின் பச்சைமிளகாய், வெங்காயம், கருவேப்பிலை என்பவற்றை சிறியதாக வெட்டிக் கொள்ளவும்.
இறுதியாக தோல் உரித்துவைத்த சுட்ட கத்தரி, உப்பு, தேங்காயப்பால் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து கைகளால் பிசைந்து எடுத்தால் சுவையான சட்ட கத்தரிக்காய் சம்பல் ரெடி!