ஏனையவை

நாவிற்கு சுவையான முட்டை மசாலா க்ரேவி: எப்படி செய்வது?

நாக்கிற்கு சுவையான முட்டை மசாலா க்ரேவி எப்படி செய்யலாம்ன்னு பார்ப்போம்.

தேவையான பொருட்கள் – எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 2 ,பட்டை – 2 துண்டு, பிரியாணி இலை – 2, கிராம்பு – 2 ,சோம்பு – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 3, வெங்காயம் – 2, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள் – அரை டேபிள் ஸ்பூன், கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன், மல்லித்தூள் – 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள்- 2 டேபிள் ஸ்பூன், மிளகு – 1 டேபிள் ஸ்பூன் ,தக்காளி – 2, உப்பு – தேவையான அளவு, முந்திரி பருப்பு – 10

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, சோம்பு, 3 காய்ந்த மிளகாய் சேர்க்க வேண்டும். பின்னர், நறுக்கி வைத்த 2 வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு, இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதனுடன் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய் தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பிறகு, அரைத்த 2 தக்காளியை அதில் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும். பின்னர் தேவையான உப்பை சேர்க்க வேண்டும். 10 முந்திரி பருப்பை மிக்ஸியில் நன்றாக அரைத்து, அதை தக்காளி கலவையில் சேர்க்க வேண்டும். பிறகு வேகவைத்த முட்டை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சூப்பரான முட்டை மசாலா க்ரேவி ரெடி.

Back to top button