ஏனையவை

சுவையான கொய்யாப்பழ அல்வா: ரெசிபி இதோ

கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, மெக்னீசியம், கார்போஹைடிரேட் , புரதச்சத்து , ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளன. மேலும் இவற்றில் வைட்டமின் எ, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. கொய்யாப்பழத்தை பயன்படுத்தி சுவையான கொய்யாப்பழ அல்வா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் – கொய்யாப்பழம், நாட்டு சர்க்கரை, நெய், முந்திரி, திராட்சை

செய்முறை – முதலில் கொய்யாப்பழத்தை நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்து வைத்துள்ள கொய்யாப்பழ கலவையை விதை இல்லாமல் வடிகட்டிக்கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் 3 டீஸ்பூன் நெய் மற்றும் அரைத்த வைத்த கொய்யாப்பழ கலவையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பின் அதில் இனிப்புக்கேற்ப நாட்டுசர்கரையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அவ்வப்போது அதில் நெய் சேர்த்து அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும். இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கொய்யாப்பழ அல்வா தயார்.

Back to top button