இலகுவான முறையில் சுவையான குலாப் ஜாமுன் ரெடி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு இனிப்புதான் இந்த குலாப் ஜாமுன்.
பண்டிகை காலங்களில் கடைகளில் விற்கப்படும் தயார் செய்துவைக்கப்பட்ட மாவை பயன்படுத்தி வீட்டில் இதை செய்வோம்.
ஆனால் தற்போது அன்றாட வாழ்வில் வீட்டில் பயன்படுத்தும் இட்லி மாவை பயன்படுத்தி குலாப் ஜாமுன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
gulab jamun/குலாப் ஜாமுன்
தேவையான பொருட்கள்
இட்லி மாவு 2 கப்
ரவை- 3 ஸ்பூன்
கேரட்- 1
சர்க்கரை- 1 கப்
தண்ணீர்- 1 கப்
ஏலக்காய் தூள்- 1/4 ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
அதிகம் புளிக்காத இட்லி மாவில், ரவை, அரைத்த கேரட் சேர்த்து, 15 நிமிடங்கள் ஊற விட வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து ஜீரா தயார் செய்து அதில் ஏலக்காய் இடித்ததை சேர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை சூடாக்கி மிதமான தீயில் வைத்து அதில் சிறிய சிறிய உருண்டைகளாக மாவை போட்டு பொறித்தி எடுக்கவும்.
பொறித்து ஜீராவில் அதிக நேரம் ஜீராவில் ஊறவைத்து சாப்பிட்டால் சுவையான குலாப் ஜாமுன் தயார்.