சுவையான மதுரை நூல் பரோட்டா; எப்படி வீட்டிலேயே செய்யலாம்?
பரோட்டா என்றாலே அனைவருக்கு ஞாபகம் வருவது நடிகர் சூரியின் பரோட்டா போட்டி தான். அந்த காமெடியின் பின்னர் பரோட்டாவை விதவிதமாக செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
சாதா பரோட்டா, வீச்சுப் பரோட்டா, சிலோன் பரோட்டா, முட்டை கொத்துப் பரோட்டா, பொரித்த பரோட்டா, சால்னா பரோட்டா, கிளி பரோட்டா, நூல் பரோட்டா, சிக்கன் பரோட்டா, கேரள பரோட்டா, கோதுமை பரோட்டா என அதிகமாக உள்ளன.
இப்போது மதுரை ஸ்பெஷல் நூல் பரோட்டா எப்படி வீட்டிலேயே செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா – 500 கிராம் (4 கப்)
தண்ணீர் – 250 மிலி (1 கப்)
உப்பு – 1 ½ தேக்கரண்டி
சர்க்கரை – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில்மைதா, உப்பு, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் பிசையவும்.
மாவில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 60 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.
அடுத்து அதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
பின் அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பிறகு ஒரு உருண்டையை எடுத்து விரித்து விரித்து பரோட்டா போன்று விரித்து எடுத்து, எண்ணெய் சேர்க்கவும்.
ஒரு கத்தி வைத்து 2 மிமீ இடைவெளியுடன் விரித்த மாவை வெட்டிக்கொள்ளவும்.
அதை அப்படியே சுருட்டிக் கொள்ளவும்.
ஒரு தவாவை சூடாக்கி எண்ணெய் சேர்த்து, 2 நிமிடம் பரோட்டாவை வேக வைக்கவும்.
இறுதியாக தட்டில் வைத்து தட்டுவதன் மூலம் நூல் பரோட்டா பஞ்சு போல் தயாராகி விடும்.