ஏனையவை

தித்திக்கும் அன்னாசிப்பழ ஜாம்!..இனி வீட்டிலே ஈஸியா செய்யலாம்

அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் ஏ, கால்சியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

அன்னாசி பழத்தை சாப்பிடுவதால் ஆஸ்த்துமா, ரத்த அழுத்தம், புற்றுநோய், நீரிழிவு நோய், செரிமானம், போன்ற பிரச்சனைகளை குணமாகும்.

இத்தகைய மருத்துவகுணங்கள் நிறைந்த அன்னாசி பழத்தை பயன்படுத்தி சுவையான ஜாம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள்

அன்னாசிபழம்- 1
சர்க்கரை- ஒரு கப்
எலுமிச்சை- அரை துண்டு

செய்முறை

அன்னாசி பழத்தினை அதன் தோலினை நீக்கிவிட்டு பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கி அதனை ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும்.

அரைத்த அன்னாச்சிப் பழக் கூழுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை நன்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

அன்னாச்சிப் பழ சிரப் கெட்டியாக ஆரம்பிக்கும், தண்ணீர் நன்கு வற்றும் வரையும் 5 அல்லது 8 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும்.

நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும்.எலுமிச்சை சாறு சேர்ப்பதால் அதில் சேர்க்கப்படும் சர்க்கரை உறையாமல் இருக்கும்.

Back to top button