ஏனையவை
தித்திப்பான சிவப்பரிசி பாயாசம் : செய்வது எப்படி?
சிவப்பரிசியில் பல்வேறு வகையான உணவுகளை செய்யலாம். சிவப்பரிசியில் பல சத்துக்கள் காணப்படுகின்றன. சிவப்பரிசியில் பொங்கல் மற்றும் பல இனிப்பு வகைகளை செய்வார்கள். அதிலும் சிவப்பரிசியில் பாயாசம் செய்து சாப்பிட்டு உள்ளீர்களா? அதை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்….
தேவையான பொருட்கள் – சிவப்பு அரிசி – 5 தே.கரண்டி, பால் – ஒரு லிட்டர், ஏலக்காய்த்தூள் – 1/2 தே.கரண்டி, பாதாம் – 10 (துருவிக் கொள்ளவும்) , சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை – சிவப்பு அரிசியை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாலுடன் உடைத்த அரிசியை சேர்த்துக் கொதிக்கவிட்டு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இறுதியில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், துருவிய பாதாம் சேர்த்து இறக்கினால் சுவையான தித்திப்பான சிவப்ப அரிசி பாயாசம் தாயார்.