இளவரசி டயானாவின் பிறந்ததினம்

1961ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி எட்வர்ட் ஜான் ஸ்பென்சர், பிரான்சஸ் ரூத் ப்ரூக் ரோஷே ஆகியோரின் மகளாக பிறந்தவர் டயானா. இவர்களது குடும்பமும் இங்கிலாந்தின் மிகப்பெரிய அந்தஸ்து பெற்ற குடும்பமாகும். இவர்களது குடும்பம் இயர்ல் ஸ்பென்சர் குடும்பம் என்ற பெயரை பெற்ற குடும்பம் இந்த குடும்பத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் அந்த பட்டத்தை பெற்றவர்கள்.

டயானா தனது பள்ளி படிப்பை ரிடில் ஒர்த் ஹால் ஸ்கூல் மற்றுமம் வெஸ்ட் ஹீத் ஸ்கூலில் படித்தார். இவர் படிக்கும் போது கூச்ச சுபாவம் உள்ள பெண்ணாகவும், மியூசிக் மற்றும் டான்ஸில் விருபம்ப உள்ள பின்னாகவும் இருந்தார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள இன்ஸ்டியூட் ஆல்பின் விடிமானட்டே என்ற கல்லூரியில் படித்தார். அதன் பின்பு லண்டனிற்கு திரும்பி அங்கு ஒரு கிண்டர் கார்டனில் பணியாற்றினார். அப்பொழுது தான் அவருக்கு அந்நாட்டு இளவரசர் சார்லஸ் உடனான அறிமுகம் கிடைத்தது.

அப்போதைய காலகட்டத்தில் இவர்கள் உலகின் மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டனர். இதற்கிடையில் 1981ம் ஆண்டு பிப் 6ம் தேதி பிரின்ஸ் சார்லஸ் மற்றும் டயானா ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. அந்த நிச்சயதார்த்தத்தில் அவருக்கு 12 கேரட் ஓவல் சைலோன் சபயர் சுற்றிலும் 14 சாலிட்டர் வைரம் பதிக்கப்பட்ட மோதிரம் டயனாவிற்கு அணிவிக்கப்பட்டது.

1982ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி டயானாவிற்கு முதல் குழந்தை பிறந்தது அதற்கு வில்லியம்ஸ் என பெயரிட்டனர். 1984ம் ஆண்டு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது இதற்கு ஹென்ட்ரி சார்லஸ் ஆர்பர்ட் டேவிட் என பெயரிட்டனர். இவர் தற்போது ஹாரி என அழைக்கப்படுகிறார்.
அரபு நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடியுடன், டயானாவுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நெருக்கம் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இவர்கள் இருவரும் செல்லுமிடமெல்லாம் பத்திரிகைக்காரர்கள் அவர்களைத் துரத்தினார்கள்.
அவ்வாறே 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி பாரிசில் காரில் சென்ற டயானா, டோடியை பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் துரத்தினார்கள்.

அப்போது அவர்களிடமிருந்து தப்பியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வேகமாகச் சென்ற டயானாவின் கார் விபத்தில் சிக்கியது. இதில், டயானா, டோடி இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.