இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரின் கால்த்தடம் !

இங்கிலாந்திலுள்ள ஒரு தீவின் வனாந்தரப்பகுதியில் டைனோசர் இன் கால் தட அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் டார்செட் (Dorset) கவுன்டியில் உள்ள பூலே ஹார்பர் (Poole Harbour) பகுதியில் உள்ள பல தீவுகளில் ஒன்று பிரவுன்சீ தீவு (Brownsea Island).
இங்குள்ள இயற்கை வனாந்தரப் பகுதியிலேயே டைனோசரின் கால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து இந்த டைனோசரின் கால்த்தடம் 140 மில்லியன் வருடங்கள் பழைமை உடையது என தெரியவந்துள்ளது.
3 விரல்கள் காணப்படுகின்றன
இது இகுனாடோன்ஷியன் (igunodontian) எனும் டைனோசர் இனத்தைச் சேர்ந்த டைனோசரின் கால் அடையாளம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கால் அடையாளத்தில் 3 விரல்கள் காணப்படுகின்றன. அந்த தீவிலுள்ள பிரவுன்சீ காஸ்டில் (Brownsea Castle) பகுதியினூடாகச் சென்ற ஒரு வனத்துறை அதிகாரியே இந்த கால்த்தடத்தினை கண்டுபிடித்துள்ளார்.