நீங்க இரவில் இந்த உணவுகளை சாப்பிடவே சாப்பிடாதீங்க…. பாரிய பிரச்சினை ஏற்படும்
பொதுவாக காலையில் தூங்கி எழும்பும் போது மிகவும் சுறுசுறுப்பாக எழும்ப வேண்டும் தான் அனைவரது எண்ணமாக இருக்கும். ஆனால் இதற்கு நீங்கள் இரவில் சாப்பிடும் உணவுகள் மிகவும் முக்கியமாகும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியம். நிம்மதியாக தூங்கி எழுந்தால் தான் மன மற்றும் உடல் நலன்கள் ஆரோக்கியமாகவும், சுறுப்பாகவும் இருக்கும். தூங்கும் முன்பு நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவில் அதிக கவனம் தேவை. இரவில் சாப்பிடக்கூடாத உணவுகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள்
இரவில் காரமான உணவுகள் மற்றும் மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும். நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கத்தை கெடுக்கும்.
செரிமான சிக்கலை ஏற்படுத்தும் காய்களான காலிஃபிளவர், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி போன்றவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.
பொறித்த உணவுகள், வறுத்த உணவுகள், பர்கர் போன்றவற்றை இரவு தூங்கும் முன்பாக சாப்பிடக் கூடாது.
ஐஸ் கிரீம், இனிப்பான ஜுஸ், இனிப்பு பொருட்களை இரவில் சாப்பிடுவது தூக்கத்தை கெடுப்பதுடன் வயிறு வலி பிரச்சினையை கொடுக்கும்.
துரித உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகள் இவற்றினை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இவை தூக்கத்தை கெடுக்கும்.
மது மற்றும் காஃபி அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை தூக்கத்தை தடை செய்யும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.