உடல்நலம்

மாதவிடாய் காலத்தில் தப்பி தவறியும் கூட இந்த உணவுகளை சாப்பிட்டுவிடாதீர்கள்!

பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் எது செய்ய வேண்டும் எது செய்ய கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதிலும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் உணவுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். மாதவிடாய் பெண் கருத்தரிக்காத நேரங்களில் மடிப்புகளில் உள்ள தேவையற்ற இழையங்களும், அவற்றுடன் சேர்ந்து மடிப்புக்கள் இருக்கும் நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே கழிவாக வருகின்றது. இதுவே மாதவிடாய் சூழற்சி எனப்படும்.

வெள்ளை பாண், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், கேக் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டும். மேலும் கொழுப்பான உணவுகள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், இறைச்சி, சீஸ் மற்றும் கொழுப்பு நிறைந்த பாற்பொருட்கள் என தவிர்த்தல் நல்லது. மாதவிடாய் காலத்தில் அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். குளிர்ப்பானங்கள் குடிக்க கூடாது. இந்நிலையில் மேலும் வயிற்று வலியை அதிகரிக்கும் வழியாக நீங்களே மது அருந்தக் கூடாது. பொதுவாகவே பெண்களை மது அருந்தக் கூடாது என்று தான் சொல்லுவார்கள். மாதவிடாய் காலத்தில் மது அருந்தினால் அது வலியை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button