கண் திருஷ்டியிலிருந்து விடுபட இந்த பரிகாரம் செய்ங்க
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்வதுண்டு. தற்போதுள்ள இயந்திர மயமான காலத்தில், சிலர் ஒருவர் தான் முன்னேற என்ன வழி என்பதை யோசிப்பதை விடுத்து, அடுத்தவர் எப்படி முன்னேறினார் என்பதை பார்ப்பதிலேயே நேரத்தை அதிகம் செலவிடுகிறார்.
இதனால் அவரின் எதிர்மறையான எண்ணங்கள், அந்த நபர் மீது கண் திருஷ்டியாக விழுகிறது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்கள் மூலம் ஒருவர் மீதோ அல்லது ஒரு குடும்பத்தின் மீதோ கண் திருஷ்டி ஏற்படுகிறது.
இதனால் கண்பட்டவருக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இவ்வாறான எதிர்மறை சக்திகளை நீக்கி நேர்மறை சக்திகளை எம்மை நோக்கி ஈர்க்க செய்வதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு சில வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கண் திருஷ் பரிகாரங்கள்
ஒரு வீட்டில் தீய கண் விழுந்தால், அங்கே சண்டை சச்சரவு ஏற்படும். வீட்டில் எப்பொழுதும் அமைதியின்மை நிறைந்த சூழல் நிலவுவதால், வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக நோய்வாய்ப்படுவார்கள். மேலும், தீய கண்ணால் வறுமை வீட்டிற்குள் வரத் தொடங்குகிறது.
வியாபாரத்தில் தீய கண் தோன்றினால், வியாபாரம் ஸ்தம்பித்துவிடும். அதே நேரத்தில், ஒரு நபர் செய்யும் வேலையும் கெட்டுப்போகத் தொடங்குகிறது.
தீய கண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமானின் லாக்கெட்டை அணிய வேண்டும். அதனுடன் அனுமான் சாலிசா மற்றும் பஜ்ரங்பானையும் ஓத வேண்டும். அனுமன் கோவிலுக்குச் சென்று, அங்கு இருக்கும் விபூதியை நெற்றியில் பூச வேண்டும். இதன் மூலம் கண் திருஷ்டியில் இருந்து விடுபடலாம்.
தீய கண்ணால் பாதிக்கப்பட்டால், அவர் தனது கால் அல்லது கையில் கருப்பு கயிறு கட்ட வேண்டும். இதன் மூலம் ஒரு நபர் சூனியத்திலிருந்து விடுபட முடியும்.
வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அது கண் திருஷ்டியின் விளைவாகவும் இருக்கலாம்.எனவே இதனை போக்க வீட்டில் மயில் இறகுகளை வைக்கவும். இதன் மூலம் நீங்கள் பயன் பெறலாம், வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.
வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு டம்ளரில் தண்ணீர் நிறப்பி இதில் உரு எலுமிச்சை பழத்தை போட்டு வைப்பதன் மூலம் கண் திருஷ்டிக்கு முடிவுகட்ட முடியும். எலுமிச்சைக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சக்தி அதிகமாக இருக்கின்றது.