ஏனையவை
உங்களுக்கு கொத்து கொத்தாக முடி உதிர்வா? கவலை வேண்டாம்… முடி வளர இதோ டிப்ஸ்
இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி முடி பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஆண்களில் சிலருக்கு 30 வயது நெருங்குவதற்குள் தலையில் இருக்கும் மொத்த உதிர்ந்து சொட்டை விழுந்துவிடுகிறது. தலை முடி உதிர்வதால் சிலருக்கு கவலையோடு, மனஅழுத்தமும் அதிகமாகிவிடும். ஏனென்றால், பெண்களோ சரி, ஆண்களுக்கோ சரி கூந்தல் என்பது மனிதன் அழகில் முக்கியம் வகிக்கிறது
கவலை வேண்டாம்… கீழே கொடுக்கும் சில டிப்ஸ்களை தினமும் செய்து வந்தீர்கள் என்றால் தலைமுடி செழித்து வளர ஆரம்பித்துவிடும்.
- கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் இரண்டையும் நன்றாக அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலையை அலசினால் முடி செழித்து வளரும்.
- வாரத்திற்கு ஒருமுறை வெண்ணெய் தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்துவிட்டு தலையை அலசினால் முடி செழித்து வளரும்.
- நல்லெண்ணெய்யில், நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவற்றை 10 கிராம் வீதம் சேர்த்து, நல்லெண்ணெய்யை நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்டி தலையில் தினமும் தேய்த்து வந்தால் முடி கருகருவென வளரும்.
- கடுக்காய், செம்பருத்தி பூ, நெல்லிக்காய் இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து தலையை அலசினால் முடி செழித்து வளரும்.
- ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் தடவி, 1 மணி நேரம் ஊறவைத்த பிறகு தலைகுளித்தால் முடி வளரும்.
- செரும்பத்தி இலையை நன்றாக அரைத்து, அதை தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து தலை அலசினால் முடி செழித்து வளரும்.
- மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் ஆகியவற்றை நன்றாக உலர்த்தி பொடி செய்து, அதை தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தினமும் தலைக்கு தேய்த்து வந்தால், தலைமுடி செழித்து வளரும்.