ஏனையவை

தித்திக்கும் சுவையில் பத்தே நிமிடங்களில் ஜிலேபி செய்ய தெரியுமா?

சாப்பிடுவது என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இனிப்பை விரும்பி சாப்பிடுபவர்கள் இந்த உலகில் அதிகம். லட்டு, தேன்மிட்டாய் மற்றும் அல்வா என்று விதமாக விதமாக இனிப்பு பலகாரத்தை செய்து சாப்பிடுவார்கள்.

அதே போலவே ஜிலேபியும் ஒரு மிக்கிய இடம் பிடித்துள்ளது. ஜிலேபியை தினமும் கடையில் தான் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

வீட்டில் இருந்துக்கொண்டே எப்படி சுவையான ஜிலேபி செய்யலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்
சர்க்கரை – 02 கப்

தண்ணீர் – 01 கப்

கலரிங் – 1/2 தே.கரண்டி

ஏலக்காய் தூள் – தேவையானளவு

மைதா மா – 04 தே.கரண்டி

தயிர் – 02 தே.கரண்டி

நெய் – 01 தே.கரண்டி

மஞ்சள் கலரிங்

பேக்கிங் பவுடர் – 1/2 தே.கரண்டி

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், கலரிங் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, பாகுவாக மாறும் வரை அடுப்பில் வைத்து எடுக்க வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் மைதா மா, தயிர், நெய், மஞ்சள் கலரிங் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு பைப்பிங் பையில் கரைத்து வைத்த மா கலவையை சேர்த்து, முறுக்கு பொரிப்பது போன்று எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இறுதியாக பொறித்ததை செய்து வைத்த சர்க்கரை பாகுவுடன் சேர்த்து ஒரு சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்து எடுத்தால், சுவையான மிருதுவான ஜிலேபி தயார்!

Back to top button