நீங்கள் சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி உண்பதால் ஏற்படும் ஆபத்து தெரியுமா?
நமது அன்றாட உணவில் பெரும்பங்கு வகிப்பது அரிசி சாதம். சாதம் மீந்துபோனால் அதனை மறு நாள் பயன் படுத்தும் பழக்கமும் உள்ளது. சிலர் தண்ணீர் ஊற்றிவைத்து பழைய சதத்தை சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவதானால் உடல் குளிர்ச்சியடைவதுடன் பல நன்மைகளும் நம் உடலுக்கு கிடைக்கின்றது. ஆனால் அரிசி சாதத்தை மீண்டும் வேகவைத்து சாப்பிட்டால் அது பல ஆபத்தை கொண்டுவரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சாதத்தை மீண்டும் சூடுபடுத்துவதால் ஏற்படும் விளைவுகள்
அரிசியை மீண்டும் சூடுபடுத்தினால் உணவு விஷம் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் . சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி உண்பவரா நீங்கள்? காத்திருக்கும் ஆபத்து! | Are You A Reheated Rice Person Danger Awaits மற்ற உணவுகளைப் போலல்லாமல், அரிசியில் பேசிலஸ் செரியஸ் என்ற பாக்டீரியா உள்ளது அரிசியை மீண்டும் சூடுபடுத்திய பிறகு சாப்பிடுவது இந்த பாக்டீரியாவுடன் விஷத்தன்மை உடையதாக்குகிறது. சமைத்த சாதத்தில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க அறை வெப்பநிலையில் சாதத்தை பராமரிக்க வேண்டும். சூடான சாதத்தை சமைத்த சில மணி நேரங்களில் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் சிலர் சாதத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவார்கள். அது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.