வீட்டில் நாய் வளர்ப்பதால் உண்டாகும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா?
பொதுவாகவே இந்து சாஸ்திரத்தில் பல விடயங்களுக்கும் காரணம் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் வீட்டில் நாய் வளர்பது தொடர்பிலும் ஜோதிட சாஸ்திரம் பல்வேறு வரையறைகளை கொண்டுள்ளது.
தற்காலத்தில் பலரும் வீட்டில் நாய் வளர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு நாயை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்ப்பது அதிர்ஷ்டமா? அல்லது துர்திஷ்டமா? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிட பலன்கள்
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கேது கிரகத்தை நன்மையை பெற வேண்டுமானால், உள்ளூர் இனத்தை சேர்ந்த நாயை வளர்ப்பது நன்மை பயக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கேது கெட்ட பலன்களை கொடுத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு மனம் கலங்குகிறது. அத்தகையவர்கள் வீட்டில் நாயை வளர்ப்பதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து மன அமைதி கிடைக்கும்.
ஆனால் கடையில் வாங்கிய நாயை வளப்பது நல்லதல்ல. ஏனெனில் கடையில் நாயை வாங்கும் போது கடைக்காரர் நாய்க்குட்டியை பிறந்தவுடன் அதன் தாயிடமிருந்து பிரித்து விடுவார். இப்போது குழந்தை நாயாக இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் தாயின் அன்பு தேவை.
இப்படி கடையில் நாய்க்குட்டியை வாங்கினால் சந்திரன் கோபத்திற்கு ஆளாவீர்கள். இது உங்கள் திருமண வாழ்க்கையையும் பாதிக்கும்.என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
தெருநாய்களுக்கு சேவை செய்வது அனைத்து கிரகங்களிலிருந்தும் சுப பலன்களைத் தருகிறது. வீட்டில் உள்ள முதல் அல்லது கடைசி உணவை ஒவ்வொரு நாளும் நாய்க்குக் கொடுங்கள். இது மன அழுத்தத்தை உங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்கி வைக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன், கேது ஆகிய கிரகங்கள் சேர்ந்து நாயை தத்தெடுத்தால், திருமணமானவர்களின் திருமணத்தில் தடைகள் ஏற்படும். நாயை வீட்டில் வளர்கும் முன்னர் உங்கள் ஜாதகத்திற்கு இது நல்ல பலனை கொடுக்குமா? என்பதை தெரிந்து கொண்டு வளர்ப்பதே சிறந்தது.