எந்த தெய்வத்தை எந்த மலர் கொண்டு பூஜிக்க வேண்டும் தெரியுமா! இப்படி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்!
வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்திற்கும் பரிகாரம் என்ற முறையில் ஏதாவது ஒரு தீர்வு கண்டிப்பாக இருக்கும். அவ்வாறு நாம் பரிகாரம் செய்தும் அந்த பிரச்சனையில் இருந்து நம்மால் வெளிவர இயலவில்லை என்றால், அதற்கு நாம் செய்யும் சிறு சிறு தவறுகளே காரணமாக விளங்குகிறது.
பொதுவாக சில பரிகாரங்களை சில நட்சத்திர நாட்களில் செய்தால் அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்று கூறுவார்கள். அதே போல இறைவனுக்கு நாம் சூட்டும் மலர்களுக்கும் சில அதீத சக்தி உண்டு. சில பூக்களை கொண்டு சில பரிகாரங்கள் செய்வதன் மூலமும் பரிகாரம் வெற்றியடையும்.
அந்த வகையில் இன்று நாம் எந்த நட்சத்திரத்தில் எந்த மலர்களைக் கொண்டு எந்த தெய்வத்தை பூசித்தால் என்ன பலன் கிடைக்கும் என்று தான் பார்க்கப் போகிறோம். மலர்களை கொண்டு பூஜை செய்வதால் வரும் பலன்கள் அசுபதி நட்சத்திர நாளில் சூரியகாந்தி பூவை வைத்து சிவபெருமானுக்கு நாம் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அவ்வாறு அர்ச்சனை செய்த பூக்களில் இருந்து ஒரு பூவை மட்டும் நம்முடன் வைத்துக் கொண்டால், தகப்பனார் வழி சொத்துக்களில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும். மேலும் தகப்பனாரிடம் இருக்கும் மனஸ்தாபங்கள் தீரும். பதவி உயர்வு கிடைக்கும். அரசு ரீதியான பிரச்சினைகள் நீங்கும்.
திருவோண நட்சத்திர நாளில் பவளமல்லி பூவை கொண்டு பெருமாளை அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்த பிறகு அதிலிருந்து ஒரு பவளமல்லியை எடுத்து நம்முடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் பத்திரப்பதிவு செய்தல் வெற்றிகரமாக நடைபெறும். மேலும் புதிய வீடு வாங்கும் முயற்சிகளும், வாகனம் வாங்கும் முயற்சிகளும், மனை வாங்கும் முயற்சிகளும் வெற்றி பெறும்.
அவிட்ட நட்சத்திர நாளில் சுவாமிமலை முருகனுக்கு அகத்திப்பூ அல்லது செண்பகப்பூ அல்லது சிவப்பு மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஐந்து அவிட்ட நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்யும் பொழுது, எதிர்பாராத விபத்துகள் விலகும். கர்ம வினையின் பாதிப்புகள் குறையும். கடன் தீரும்.
கோபம் ஏற்படுவது குறையும். மூல நட்சத்திர நாளில் விநாயகப் பெருமானை அருகம்புல் மாலை சாற்றி இனிப்பு தின்பண்டங்களை நைவேத்தியமாக வைத்து வணங்க வேண்டும். இவ்வாறு வணங்குவதால் காரிய தடைகள் நீங்கி, காரிய வெற்றி கிடைக்கும்.
மேலும் குடும்ப ஒற்றுமை ஏற்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும். குரு பகவானின் பரிபூரண ஆசியை எளிதாக பெறலாம். இந்த எளிமையான பூ பரிகாரத்தை அதற்குரிய நட்சத்திர நாளில் நாம் செய்து அனைத்து வாழ்க்கையில் நலன்களும் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம் என்ற இந்த கருத்தோடு பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.