ஆன்மிகம்

அதீத புத்திசாலிகளாக இருக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

பொதுவாகவே ஏனைய உயிரிங்களில் இருந்து மனிதன் வேறுபடுவது சிந்தித்து செயற்படும் அறிவான பகுத்தறிவு காரணமாகத்தான். உலகில் இருக்கும் அனைவரும் அவர் அவர்களுக்கே உரித்தான தனித்திறமையை கொண்டிருக்கின்றார்க்ள். ஒவ்வொரு மனிதர்களும் அறிவாளிகள் தான் இருப்பினும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் அதிகமான புத்தி கூர்மையுடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் யார் யார்ரென இந்த பதிவில் பார்க்கலாம்.

மகரம்
அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் மிகந்த அறிவாற்றல் உடையவர்களாக இருக்கின்றனர். இவர்கள் அதிகளவில் நிந்தித்த பின்னரே எந்த காரியத்தையும் செய்ய தொடங்குவார்கள். எந்த விடயம் எதில் முடியும் என சரியாக அனுமானிக்க கூடியவர்களாக இருக்கின்றனர்.

துலாம்

துலாம் ராசியுடையோர், சமநிலை மற்றும் நல்லிணக்கத்திற்கான வழியை வகுப்பவர்களாக இருக்கின்றனர். அவர்கள் அறிவார்ந்த நோக்கங்களையும் சிந்தனைகளையும் எப்போதும் கொண்டிருக்கின்றார்கள். ஒரு விடயம் குறித்து எதுவும் தெரியவில்லை என்றால் கூட தங்களது புத்திசாலித்தனத்தால் எதையும் சுயமாக கற்றுக்கொண்டு முன்னேறக்கூடியவர்களாக இருப்பார்கள்.

கன்னி
அவர்கள் அறிவைத் தேடுவதற்கும் தங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்கும் இயற்கையான விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள்.சிக்கலைத் தீர்ப்பதற்கான அவர்களின் நடைமுறை அணுகுமுறை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த இயல்பு அவர்களை ராசியின் மிகவும் அறிவார்ந்தவர்களாக ஆக்குகிறது. இந்த ராசிஉடைய பெரும்பாலானோருக்கு கணிதம் மிகவும் பிடித்த பாடமாக இருக்குமாம். இவர்களுக்கு எதையும் நுணுக்கமான ஆராய்ந்து செயற்படும் ஆற்றல் இயற்கையிலேயே காணப்படும்.

கும்பம்
இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுவதிலும் செயல் படுவதிலும் வல்லவர்கள், கும்ப ராசிக்காரர்கள்கும்ப ராசிக்காரர்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் இயற்கையாகவே சுதந்திரமாக சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட ராசிக்காரர்களுள் இவர்களுக்கு தனி சிறப்பு காணப்படுகின்றது. இவர்கள் எதிர் காலத்தை குறித்து அதிகம் சிந்திப்பவர்களாக இருக்கின்றனர். இவர்கள் எப்போதும் நினைத்ததை நடித்தி முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எந்த விஷயமாக இருந்தாலும் அதனை எளிதில் கற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் கற்பூர புத்தி கொண்டவர்கள். இவர்கள், எந்த சூழ்நிலையையும் சரியாக ஆராய்ந்து அதன் பின்விளைவுகளை தெரிந்து செயல்படுவதில் சிறந்தவர்களாக விளங்குவர். தனக்கு தேழவையான விஷயங்களை யார் உதவியுமின்றி சுயமாக கற்றுக்கொள்ளக் கூடியவர்கள்.

Back to top button