உடல்நலம்

இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் வாதுமை பருப்பு.. யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?

பொதுவாக தற்போது இருக்கும் அவசர உலகில் உடல் ஆரோக்கியம் குறித்து குறைவான அளவு மக்களே கவனம் செலுத்துகிறார். சாப்பாட்டை பெறுவதற்காக வேலைக்கு செல்லும் காலம் சென்று தற்போது சாப்பிடுவதற்கு கூடநேரம் இல்லாமல் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் காரணமாக சிறுவயது முதலே நோய்கள் ஆரம்பித்து விடுகின்றன.

இப்படியொரு நிலையில் எண்ணற்ற ஆரோக்கியமான நன்மைகளுக்கு உதவியாக இருக்கும் வாதுமை பருப்பு பற்றி தெரிந்து கொள்வோம்.

வாதுமை பருப்பு
பாதாம் பருப்பிற்கு இன்னொரு பெயர் தான் “வாதுமை பருப்பு”. பாதாம் என்று தான் நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம்.

செரிமானம் முதல் இதயம் வரையிலான பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தாக வாதுமை பருப்பு பார்க்கப்படுகின்றது. நட்ஸ் வகைகளில் ஒன்றான இதனை தாரளமாக எடுத்து கொள்ளலாம்.

பலன்கள்

  1. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இந்த பருப்பு பெரிதும் உதவியாக இருக்கின்றன. இதனால் நட்ஸாக குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வருவது சிறந்தது.
  2. வாதுமை பருப்பில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளன. இதில் கிளைசிமி குறியீடு குறைவாக தான் இருக்கின்றது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க நினைப்பவர்களுக்கு எடுத்து கொள்ளலாம்.
  3. இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தி இதய ஆரோக்கியத்தை வாதுமை பருப்பு மேம்படுத்தும். மாறாக வயதிற்கேற்ற அளவீடுகளில் எடுத்து கொள்வது சிறந்ததாக இருக்கும்.
  4. வாதுமை பருப்பின் பால் சாதாரணமாக நாம் குடிக்கும் பசும் பாலை விட சிறந்தது. இதனை குடிப்பதால் எலும்புகள் வலுவாக்கப்பட்டு மூட்டு வலிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
  5. வாதுமை பருப்பு பால் குடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவாக இருக்கும். ஏனெனின் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கவும், அதனை கட்டுபடுத்தி வைக்கவும் இந்த பால் பயன்படுகின்றது.
  1. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை சீர்ப்படுத்தும் வேலையை வாதுமை பருப்பு செய்கின்றது.
  2. சிலர் மலச்சிக்கல் பிரச்சினையால் மிகவும் அவதிபட்டுக் கொண்டிருப்பார்கள். இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் தினசரி 4 -6 வாதுமை பருப்பை எடுத்து கொள்வதால் செரிமானம் இலகுவாக்கப்பட்டு மலச்சிக்கலும் குறையலாம்.

Back to top button