உடல்நலம்

இந்த கசப்பான காய்கறியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

காய்கறிகளில் பொதுவாக பாகற்காயை பலரும் உணவில இருந்து ஒதுக்கிவிடுவார்கள். ஆனால் இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நலன்களும் அடங்கியுள்ளன. இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. மேலும் நார்ச்சத்து, வைட்டமின் A , வைட்டமின் C , ஃபோலேட் , பொட்டாசியம், ஜின்க், அயர்ன் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. பாகற்காயை ஜூஸ் எடுத்தும் அருந்தலாம். மேலும் ஊறுகாய், பொரியல், வறுவல், தொக்கு, குழம்பு, கூட்டு என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம். இது பல ஆரோக்கிய பிரச்சினைகளை சரி செய்கின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

1. பாகற்காய் வயிறு, குடல்பகுதி மற்றும் நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்கின்றது.

2. உடலில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக போராடி நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

3. ரத்தத்தை சுத்திகரிப்பது மட்டுமின்றி ரத்த ஓட்டத்திற்கும் வழிவகுக்கிறது. மேலும்,உங்களது சரும பாதுகாப்புக்கும் உதவுகிறது.

4. ஆல்கஹாலால் ஏற்பட்ட நச்சுத்தன்மையை இது கல்லீரலுக்கே சென்று சுத்தப்படுத்தி உங்களை ஹேங்ஓவரில் இருந்து காப்பாற்றுகிறது.

5. உங்களுக்கு ஏற்படும் காயங்களை கூட வெகு விரைவில் ஆற்றுவதற்கு இதன் செயல்பாடுகள் உதவுகின்றன.

6. முகப்பருக்கள் போன்றவற்றை தடுத்தல், வயதான தோற்றம் ஏற்படுவதை மெதுவாக்குதல் போன்றவற்றை செய்கிறது.

7. சொரியாசிஸ் மற்றும் அரிப்பு போன்ற சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் இது உதவுகிறது.

8. பொடுகு தொல்லை, முடி உதிர்தல் போன்றவற்றை தடுக்கவும் இது பயன்படுகிறது.

9. பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவு மற்றும் ஹீமோகுளோபின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதாக அதிலும் குறிப்பாக ரத்தத்தில் உள்ள ஃப்ருக்டோஸ்மின் அளவை குறைக்க உதவுகிறது.

10. உங்கள் உடல் இன்சுலினை பயன்படுத்தி கொள்ளும் விகிதத்தை அதிகரித்து சரியான அளவில் சர்க்கரை சத்து உங்கள் உடல் பகுதிகளுக்கு செல்ல உதவுகிறது.

11. உங்கள் தொப்பை மற்றும் ஒட்டுமொத்த உடல் பருமனை குறைப்பதில் பாகற்காய் உதவுகிறது. மேலும், இது கொழுப்பு செல்களின் வளர்ச்சியை தடுத்து கொழுப்பு அதிகரிப்பை தடுக்கிறது.

​பக்க விளைவுகள்

சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி,வயிற்று வலிஉள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். கர்ப்பிணி பெண்கள் பாகற்காய் எடுத்து கொள்ளவதை தவிர்க்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவை குறைப்பதால் ஏற்கனவே சிகிச்சையில் இருக்கும் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இதை எடுத்து கொள்ள வேண்டும்.

Back to top button