உடல்நலம்

உடல் எடையை குறைக்க இந்த காயை மறக்காம வாங்கி சாப்பிடுங்க!

வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காயில் புரதச்சத்துக்கள், கால்சியம், பொட்டாசியம், குறைவான கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் நம் உடலுக்கு தேவையான கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளன. உடல் எடையை குறைக்க போராடும் நபர்கள் தாராளமாக அவரைக்காயை சமைத்து சாப்பிடலாம், ஏனெனில் இது கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது. அவரைப் பிஞ்சில் உள்ள துவர்ப்புச் சுவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், வாரம் இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பித்தம் குறையும்.

அவரைக்காயை அதிகம் உண்பதால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும், இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது ஏனென்றால் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை குணமாகும். மலச்சிக்கலை சரிசெய்வதுடன், வயிற்றுப் பொருமலை நீக்கும், சிறுநீரைப் பெருக்கும், சளி இருமலைப் போக்கும், மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

இது தசை நார்களை வலுப்படுத்துவதுடன், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். அவரைக்காயை இரவு உணவில் சேர்த்துக்கொண்டால் சுகமான தூக்கத்தை பெறலாம். அவரைக்காய் முற்றிவிட்டால் உணவில் சேர்த்துக்கொள்ளாமல், சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும், ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

Back to top button