ஏனையவை

தலைமுடி வளர இனி இந்த தப்பை பண்ணாதீங்க

தலைமுடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுத்தால் மட்டும் போதாது, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும். அதோடு ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருந்தால், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். அந்தவகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைமுடியின் வளர்ச்சியைத் தடுக்கும் சில விஷயங்கள் என்ன என்பதை தெரிந்துகொண்டு, அவற்றை தவிர்த்திடுங்கள்.

அதிகமாக தலைக்கு குளிப்பது
தினமும் தலைக்கு குளிப்பது மிகப்பெரிய தவறு. அது தலைமுடியை சேதப்படுத்தி, தலைமுடி உதிர வழிவகுக்கும்.

அதோடு தலைக்கு அடிக்கடி குளித்தால், அது தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெயை வெளியேற்றி, முடியை பொலிவிழந்தும், ஆரோக்கியமற்றதாகவும் காட்டும்.

வெப்பமூட்டும் கருவி
தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரைட்னிங், ஹேர் கர்லர், ஹேர் ட்ரையர் போன்றவை தலைமுடியின் அமைப்பை சேதப்படுத்தும்.

மேலும் அது முடியின் முனைகளில் வெடிப்புக்களை உண்டாக்கி, முடியின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே இம்மாதிரியான கருவிகளை அதிகம் உபயோகிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

ஈரமான முடியை சீவுவது
ஈரமான தலைமுடியை சீவக்கூடாது. முடி நன்கு காய்ந்த பின்பே தலைமுடியை சீவ வேண்டும். ஈரமான முடியானது எளிதில் உடையும்.

அதேப் போல் ஈரமான முடியை இறுக்கமாக கட்டக்கூடாது. இல்லாவிட்டால் முடி அதிகம் உடைந்து, தலைமுடியின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.

தவறான முறையில் கண்டிஷனரைப் பயன்படுத்துவது
கண்டிஷனரை முடியில் மட்டும் படுமாறு, ஸ்கால்ப்பில் படாதவாறு பயன்படுத்த வேண்டும்.

ஸ்கால்ப்பிற்கு கண்டிஷனரைப் பயன்படுத்தினால், அது முடி உதிர்தலுக்கு வழிவகுத்து, நாளடைவில் முடியின் வளர்ச்சியையே தடுத்துவிடும்.

துணியால் முடியை துடைப்பது
தலைக்கு குளித்த பின் பலர் தலைமுடியை உலர்த்துவதற்கு, துணியால் தலைமுடியை தேய்த்து துடைப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம்.

தலைமுடியை எப்போதுமே தேய்த்து உலர்த்தக்கூடாது. அப்படி தேய்த்தால், துணியுடன் முடி உரசும் போது, அது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

Back to top button