உடல்நலம்

உடல் எடையை குறைக்கும் தோசை.. எப்படி செய்யணும் தெரியுமா?

பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்களில் பாதிக்கு மேற்ப்பட்டவர்கள் அதிகமான எடையால் அவஸ்தைப்படுகிறார்கள். மேலும் சிலர் டயட் என்ற பெயரில் விரும்பிய சாப்பாட்டை கூட சாப்பிட முடியாமல் இருக்கிறார்கள். இப்படியானவர்கள் சாப்பாட்டில் சில கட்டுபாடுகளையும், மூலிகை பொருட்களையும் சரியாக கடைபிடித்தால் எந்தவிதமான டயட்டும் இன்றி எடையை குறைக்கலாம். இதன்படி, உடல் எடையை குறைக்கும் தோசை எப்படி செய்வது என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் :
பாசி பயறு – 1 கப்
உளுந்து – 1/4 கப்
அரிசி – 4 tbsp
வெந்தயம் – 1 tsp
உப்பு – தே.அ
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 4
பெருங்காயத்தூள் – 1
சிட்டிகை கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
முதலில் பாசி பயறு, உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை எடுத்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.

பின்னர் அதனை சரியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். 4 மணி நேரத்திற்கு பின்னர் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அதில் வெங்காயம், பச்சை மிளகாய் , கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கி போடவும்.

பின் தேவையான அளவு உப்பு, பெருங்காய தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதனை தொடர்ந்து தோசைக்கல் வைத்து தோசை மாதிரி மாவை சுட்டு எடுத்தால் சுவையான பச்சை பயறு தோசை தயார்!

முக்கிய குறிப்பு

இதனை இரவு நேர சாப்பாட்டில் சேர்த்து கொள்வது சிறந்தது.

Back to top button