இலங்கை

மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து சந்தேகம்?

இந்திய கடன் சலுகையின் கீழ் கொள்வனவு செய்யப்படும் மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளதாகக் கூறி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தது.

இரண்டு இந்திய தனியார் நிறுவனங்களிடமிருந்து மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, அமைச்சர்கள், அமைச்சரவை, சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியன எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Back to top button