உடல்நலம்

மழைக்காலத்தில் ஏற்படும் வறட்டு இருமல், சளியை போக்க இதை குடிங்க

பொதுவாக மழைக்காலம் என்பதால் பலருக்கும் இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.இந்த சமயத்தில் அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாலில் ம ஞ்சள் கலந்து கொடுக்கலாம். எனவே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் பால் போட்டு குடிங்கள். சளி, இருமல் எதுவாக இருந்தாலும் குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்
பால் – 1 கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு – 1 ஸ்பூன்

செய்முறை
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

பால் நன்கு கொதித்ததும், அதில் பனங்கற்கண்டு சேர்த்து கரைய விட வேண்டும். அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்பு அதில் மிளகுத் தூளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறினால், மஞ்சள் மிளகு பால் ரெடி.

கிடைக்கும் பலன்கள்
பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது. அதேபோல மிளகுக்கும் ஏராளமான மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாயு தொந்தரவு மற்றும் சளியை அறவே நீக்குகிறது. மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, வறட்டு இருமல் மற்றும் சளியை நிரந்தரமாக நீக்குகிறது.

Back to top button