இளநீர் குடிப்பதால் உடல் பருமன் குறையுமா!
பொதுவாக உடல் எடை அதிகரிப்பு என்பது பெரும் பிரச்சினைகுரிய விடயமாகும். ஆனால் அதை விட தொப்பை ஏற்படுவது என்பது பெரும் பிரச்சினைக்குரிய விடயமாகும். உடுத்தும் உடை முதல், உறங்கும் நேரம் வரை இந்த தொப்பை நம்மை படாதபாடு படுத்தி விடுகிறது. தொப்பையை குறைக்க வேறு வழியே இல்லையா என ஆண்கள் பெண்கள் என இருபாலருமே புலம்புவது உண்டு.
அதிக உடல் எடை காரணமாக அதிக கொழுப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். உடல் பருமனை குறைக்க பல வித பழக்க வழக்கங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, நாம் உண்ணும் உணவில் அதிக கட்டுப்பாடு தேவை. எனவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த வழி உள்ளது.
உடல் எடை அதிகரிப்பு
இளநீர் பல ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு மிகச்சிறந்த பானமாகும்.
இது நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு இயற்கை பானம்.
கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் இது கிடைக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை பெருமளவு குறைக்கலாம்.
இளநீரில் இயற்கையான சர்க்கரை மற்றும் மிகக் குறைவான கலோரிகள் உள்ளன.
கார்போஹைட்ரேட்டுகளும் இதில் குறைவான அளவில் காணப்படுகின்றன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஒரு முறை இளநீர் குடித்தால், நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால், தேவை இல்லாத ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
அத்தகைய சூழ்நிலையில், படிப்படியாக உங்கள் எடை குறைகிறது. பழச்சாறுகளை விட இளநீர் அதிக நன்மை பயக்கும். ஏனெனில் அதில் அதிக தாதுக்கள் உள்ளன.
எப்போது குடிக்கலாம்
இளநீர் ஒரு நாளின் எந்cத நேரத்தில் வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் நீங்கள் உடல் எடையைக் குறைப்தற்காக குடிக்கிறீர்கள் என்றால் அதற்கு காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.
வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கும்போது வயிறு நீண்ட நேரம் நிறைவாக இருக்கும். அதனால் நீங்கள் அடுத்த உணவின் கலோரியை குறைவாக எடுத்துக் கொள்வீர்கள்.
இது உடல் எடை இழபபை ஊக்குவிக்கும். இளநீரை காலையில் வெறும் வயற்றில் குடிக்கும் போது.அதிலுள்ள பயோ – ஆக்டிவ் என்சைம்கள் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி வேகப்படுத்தும். மெட்டபாலிசம் உடலில் அதிகமாகும் போது உடல் எடை தானாகக் குறைய ஆரம்பிக்கும்.