இலங்கை

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வில் போதைப்பொருள்!

யாழில் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வில் (கார்னிவேல்) போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இரு இளைஞர்களை அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சோதனையிட்டனர். இதன் போது , அவர்களின் உடைமையில் இருந்து ஒரு தொகை கஞ்சாவை மீட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Back to top button