ஆன்மிகம்

குருவின் வக்ரபெயர்ச்சியால் அடுத்த 118 நாட்களுக்கு இந்த ராசியினருக்கு அமோகமான வாழ்க்கை!

குரு பகவான், செப்டம்பர் மாதத்தில் பின்னோக்கி செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது. நவகிரகங்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வதாக வேத ஜோதிடத்தில் குறிப்படப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு ராசியை சேர்ந்த ஜாதகரின் வாழ்க்கை பாதிப்படைகிறது. அதில் வியாழனின் இயக்கத்தால் ஏற்படுத்தும் மாற்றம் அனைவரின் வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. guru/குரு டிசம்பர் 31 வரை குரு வக்ரம் தொடரும், எனவே இந்த மூன்று அதிர்ஷ்ட ராசிகளும் வியாழனின் பின்னடைவு காரணமாக 118 நாட்களுக்கு அதிஸ்டவசமான வாய்ப்பைப் பெறுவார்கள். இதன் காரணமாக மேஷ ராசி நபர்கள் வாழ்க்கையிலும் முன்னேற்றமடையும் , செழிப்பும் கிட்டும். இது தவிர பணப்பலன்களும் அதிகம் வந்தடையும். வியாழனின் பின்னடைவு காரணமாக அதிஷ்டம் பொங்கும் மிதுனம்,சிம்மம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள்

மிதுனம் – மேஷத்தில் வியாழன் பிற்போக்கான காலத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் வந்தடையலாம். இந்த ராசிக்காரர்களுக்கு 118 நாட்களுக்கும் ராஜயோகம் உண்டு. இதுபோன்ற நிலைகளில் , பணப்பலன்கள் மேம்படும், நீண்ட காலமாக தடைபட்ட பணிகள் முடிவடையும். , திருமண வாழ்வில் உள்ள பிரச்னைகளும் தீரும்.புதிய வருமானம் கிடைக்கும்.

சிம்மம் – சிம்ம ராசிகாரர்கள், இந்த சமயத்தில் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு பணிகளைச் செய்வதன் மூலம் மனதால் திருப்தி அடைவார்கள். வரும் நாட்களிளும் இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் வரும். குடும்பத்துடன் சந்தோஷமான நேரத்தை செலவிடுங்கள். திருமண வாழ்வில் உள்ள பிரச்னைகள் தீரும்.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் சாதகமாக இருப்பதால், நீண்ட காலமாக முடியாமல் இருக்கும் வேலைகளை செய்து முடிப்பதற்கு இது உதவும்.மேலும் வியாபாரிகளும் அதிக லாபம் பெறலாம். இதன் மூலம் பணக்கஷ்டத்திலிருந்தும் விடுபடுவீர்கள். தொழில் தொடர்பான பிரச்னைகளும் தீரும். வாழ்க்கை மகிழ்ச்சியை தருகிறது. 

Back to top button