அடர்த்தியாக கருகருன்னு முடி வளர.. இதை சாப்பிடுங்க
பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உட்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை தருகின்றன. நெல்லிக்காயை உணவில் சேர்த்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமின்றி நல்ல அடர்த்தியான கூந்தலையும் பெறலாம். நெல்லிக்காயின் சாறை தேங்காய் எண்ணெயுடன் சம அளவு கலந்து காய்ச்சி தேய்த்து வர, முடி நன்கு வளரும். நெல்லிக்காய் சாறில் உள்ள ஆன்டி – பாக்டீரியல் பண்புகள் பொடுகை விரட்டி வேர்க்கால்களைச் சுத்தப்படுத்தும். அதிகளவில் பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் எலுமிச்சை சாறையும் நெல்லிக்காய் சாறையும் முடியின் வேர்க்கால்களில் தேய்த்து குளித்து வர, பொடுகு காணாமல் போகும். மேலும் இளநரை வராமல் தடுக்கவும் வந்த நரையை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து முடியை நன்கு கருமையாக வளரச் செய்யும்.
தேவையான பொருட்கள் நெல்லிக்காய்- 1/4 கிலோ நாட்டு சக்கரை- 150 ஏலக்காய் பொடி- 1 ஸ்பூன் நட்ஸ் வகைகள் நெய்- 3 ஸ்பூன்
செய்முறை நெல்லிக்காயை ஒரு இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரின் உதவியுடன், நெல்லிக்காயை ஐந்து நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைத்து கொள்ளவும். பின் நெல்லிக்காய்களை துருவி தனியாக எடுத்து வைக்கவும். இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெல்லிக்காய் மற்றும் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும். நெல்லிக்காய் மற்றும் சர்க்கரை ஒன்று சேர்ந்து திக்கான பதத்திற்கு வரும் வரை கைவிடாமல் கிளறவும். இதில் ஏலக்காய் பொடி, மற்றும் பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகளை சேர்த்து கலந்து விடவும். கடாயில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் ஆற விடவும். கைகளில் சிறிதளவு நெய் தடவிக் கொண்டு சிறிய உருண்டைகளாக உருட்டவும். அவ்ளோதான் சுவையான நெல்லிக்காய் லட்டு தயார்.