தமிழகத்தில் பிரபல தொழிலதிபர் வீட்டில் தீவிரமடையும் ED Raid.., முழு விவரம் இதோ
தமிழக மாவட்டம், திண்டுக்கல் தொழிலதிபரான ரத்தினம் வீட்டில் இரண்டாவது முறையாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற மணல் குவாரி முறைகேடு தொடர்பாக திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன் ஆகியோர் மீது புகார் எழுந்தது. அதன் பேரில் கடந்த செப்டம்பர் மாதம் 12 ம் திகதி காலை 9 மணி முதல் இவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் 10 -க்கும் அதிகமான அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதன்போது, மேற்கொண்ட சோதனையின் போது, தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அவரது மனைவி, மூத்த மகன் துரைராஜ் மற்றும் இளைய மகன் வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர். 31 மணி நேரம் நடந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதுமட்டுமல்லாமல், வங்கி அதிகாரி மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஒருவர் வீட்டிற்குள் சென்று நகைகளை மதிப்பீடு செய்தனர்.
மீண்டும் சோதனை
இந்நிலையில், இரண்டாவது முறையாக இன்று (நவ.25) திண்டுக்கல் ஜி டி என் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ரத்தினம் மற்றும் அவரது இரு மகன்கள் இல்லாத நிலையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அவரது மனைவி மட்டும் இருந்ததாக தகவல் வந்துள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை 3 மணி நேரமாக சோதனை நடந்து முடிந்த பின்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.