உடல்நலம்

நீங்கள் தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

ஓட்ஸ் ஆனது Avena Sativa என்ற தாவரத்தில் இருந்து விளைவிக்கப்படும் உணவுப்பொருளே ஆகும். உடல் எடையைக் குறைக்க நினைப்போரின் மத்தியில் ஓட்ஸ் மிகவும் பிரபலமான உணவாகும். ஓட்ஸ் ஆரோக்கியமான உணவு தான். ஆனால் ஓட்ஸ் அனைவருக்குமே ஏற்றதாக இருக்காது. தினமும் ஓட்ஸை சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.


தினமும் சாப்பிடுவதால் எழும் பிரச்சனைகள்

ஓட்ஸில் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. இது செரிமான செயல்முறையை மெதுவாக்கி, வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும்.

ஓட்ஸில் உள்ள க்ளுக்கோஸ், ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்து போன்றவை பெருங்குடல் மற்றும் சிறுகுடலில் உள்ள பாக்டீரியாக்களால் உட்கொள்ளப்பட்டு, வாயு தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றை வரவழைக்கும்.

தினமும் ஓட்ஸை உட்கொண்டால், அது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தசை இழப்பை உண்டாக்கும்.

ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். இதன் விளைவாக நாள் முழுவதும் எந்த உணவுகளையும் உட்கொள்ள ஆர்வம் எழாமல், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

ஓட்ஸை மட்டும் உட்கொள்வது நினைவாற்றல் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும் மற்றும் விழிப்புணர்வைக் குறைக்கும்.

oats/ஓட்ஸ்Shutterstock

ஓட்ஸில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் இருந்தாலும், இது இரத்த சர்க்கரையின் அளவை சட்டென அதிகரிக்க செய்யும். அதுவும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, இரத்த சர்க்கரை உடனே அதிகரிக்கும்.

ஓட்ஸ் உடன் சர்க்கரை, சாக்லேட் சிப்ஸ் மற்றும் பிற இனிப்புக்களை சேர்த்து உட்கொண்டால், ஓட்ஸில் உள்ள சத்துக்கள் குறைந்து, கலோரிகள், சர்க்கரை, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகரித்து, ஆரோக்கியத்தை சீரழித்து இல்லாத சர்க்கரை நோயை வரவழைத்துவிடும்.

ஓட்ஸை அதிகம் உட்கொண்டால், அது எடை இழப்பிற்கு பதிலாக, உடல் எடையை அதிகரிக்கும். எனவே எடை குறைய வேண்டுமானால் அளவாக சாப்பிட வேண்டும்.

எனவே தினமும் வெறுமனே ஓட்ஸை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். மாறாக, ஒரு நாள் இட்லி, ஒரு நாள் தோசை, ஒரு நாள் ஓட்ஸ் என்று சாப்பிடுங்கள். இதனால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

Back to top button