இலங்கை

ராஜபக்க்ஷ குடும்பத்துக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்!

ப்ளூ டிக் அங்கிகாரத்திற்கு சந்தா கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளுக்கு ட்விட்டரின் சிஇஓ எலான் மஸ்க் கடந்த வாரம் கெடு நிர்ணயித்திருந்தார். அதனடிப்படையில் இலங்கை பிரபலங்கள் பலரும் ‘ப்ளூ டிக்’ இழந்துள்ளனர்.

அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஹர்ஷ டி சில்வா, உள்ளிட்டவர்களும் ‘ப்ளூ டிக்’ இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை , ட்விட்டரில் ப்ளூ டிக் சந்தா செலுத்தாத பயனர்கள் அந்த அங்கிகாரத்தை இழந்துள்ளனர். இதில் உலகளவில் மிகவும் பிரபலமாக அறியப்படும் பிரபலங்களும் அடங்குவர். ஏப்ரல் 20-ம் திகதிக்குப் பின்னர் சந்தா செலுத்தப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் அங்கிகாரம் வழங்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது சந்தா செலுத்தாத பயனர்களின் ப்ளூ டிக் அங்கிகாரம் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button