இலங்கை

வட மாகாணத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு

றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் நூற்றுக்கணக்கான வேலைவாயப்புகள் காத்திருக்கும் நிலையில் அந்த வெற்றிடங்களுக்காக விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் அமைந்துள்ளது கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm).

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமாக இது காணப்படுகிறது.

இந்த நிலையிலேயே,

 1. வீடியோ எடிட்டர் (Video editor)
 2. கமரா மேன் (Camera man)
 3. மனித உள முகாமைத்துவர் (HR) – Human Resources (HR) Manager
 4. கணக்காளர் (Accountant)
 5. சந்தைப்படுத்தல் முகாமையாளர் (Marketing Manager)
 6. விற்பனை முகாமையாளர் (Sales Manager)
 7. மின் பொறியியலாளர் (Electrical Engineer)
 8. சமையல் வல்லுனர் (chef)
 9. உணவு பரிமாறுபவர் (Food server)
 10. தொழிநுட்ப உதவியாளர் (Technical Assistant)
 11. கேம் ஒபரேட்டர் (Games Operators)
 12. இயந்திர பொறியியலாளர் (Mechanical engineers)
 13. தோட்ட பராமரிப்பாளர்கள் (Garden keepers)
 14. துப்பரவு பணியாளர்கள் (Cleaning workers)
 15. வரவேற்பாளர் (Receptionist)
 16. பூச்செடிகள் பராமரிப்பாளர் (Caretaker of flower plants)
 17. நீச்சல் தடாக பணியாளர் (Swimming pool attendant)
 18. மேசன் தொழிலாளர்கள் (Mason workers)
 19. தச்சு தொழிலாளர்கள் (Carpenters)
 20. அனுபவமுள்ள தேனீ வளர்ப்பாளர்கள் (Experienced beekeepers)
 21. அனுபவமுள்ள காளான் வளர்ப்பாளர்கள் (Experienced mushroom growers)
 22. வாகன ஓட்டுநர்கள் (Drivers)
 23. பாதுகாவலர்கள் (Security guard) உள்ளிட்ட வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த வெற்றிடங்களுக்கு தகமையானவர்கள் Info@reecha.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமது சுயவிபர கோவையை அனுப்பி வைக்க முடியும்.

மேலும் இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள +94 77 777 2353 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

Back to top button