உடல்நலம்

தீராத பொடுகுத் தொல்லையா! இதோ உங்களுக்கான தீர்வு

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் இந்த பொடுகு பிரச்சினை பெரும் தொல்லையாக இருக்கின்றது.

இந்த தலை பொடுகு மிகவும் எரிச்சலூட்டும் முடி பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது.

பொடுகு தொல்லை பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றது.

குறிப்பாக ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் நம்முடைய உடலில் உள்ள சில நோய் அறிகுறிகள், நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் கலந்த பொருட்கள் என முடியில் பொடுகு வர பல காரணங்கள் இருக்கின்றன.

மேலும் அதை குணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது விஷயம் அல்ல. இருப்பினும் இதனை வீட்டில் இருக்கும் எளிய பொருட்கள் கொண்டு நீக்க முடியும்.

அவ்வாறான ஒரு இயற்கை வழியை பற்றி தான் இங்கே பார்க்கப்போகிறோம். கற்றாழை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட தாவரமாகும்.

கற்றாழை
இவற்றை சருமம், முடி மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்குப் பயன்படுத்தலாம்.

கற்றாழையில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் முடி மற்றும் உச்சந்தலையைப் பாதுகாக்கிறது.

மேலும் இதில் கொழுப்பை உடைக்கும் நொதிகள் நிறைந்துள்ளது. இவை முடியில் இருந்து அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவுகிறது.

பொடுகு பிரச்சினைக்கு தீர்வு
எனவே, இந்த பொடுகு பிரச்சினைக்கு கற்றாழையை பயன்படுத்தலாம். இதற்கு கற்றாழையை எடுத்துக் கொண்டு, அதில் ஜெல்லை வெளியே எடுக்க வேண்டும்.

பின்னர் பேக்கிங் சோடாவை அதில் கலந்து, இந்த கலவையை உச்சந்தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து முடியைக் கழுவலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வர சிறந்த பரனை பெறலாம்.

மேலும்,பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பயன்படுத்துவது முடியில் இருந்து அதிக எண்ணெயை அகற்ற உதவுகிறது. எனினும், பேக்கிங் சோடாவை தினம் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button