உடல்நலம்

வேகமாக தொப்பையை குறைக்கும் பானம்

பொதுவாக பெரும்பாலான நபர்களுக்கு தொல்லை கொடுத்து வரும் தொப்பையை சில பானங்கள் மூலம் எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இன்று பெரும்பாலான நபர்களின் பிரச்சினை என்னவென்றால் தொப்பை இருந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினரும் தொப்பையால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த தொப்பையானது ஒருவரின் உடல் தோற்றத்தை மோசமாக வெளிக்காட்டுவதுடன், பல நோய்களையும் வரவழைக்கின்றது. ஆகவே முடிந்த அளவு தொப்பை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுடன், தொப்பை ஏற்பட்டுவிட்டால், தினந்தோறும் அதனை குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

ஏனெனில் உடலிலேயே வயிற்றுப் பகுதியில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைப்பது என்பது மிகவும் கடினம். நாம் உண்ணும் உணவுகள் நேரடியாக வயிற்றுக்கு செல்லும் நிலையில், அது செரிமானம் ஆவதற்கு போதுமான உடலுழைப்பு நிச்சயம் தேவை. அவை இல்லாத பட்சத்தில் உணவில் உள்ள கொழுப்புகள் வயிற்றில் தேங்கி தொப்பையை ஏற்படுத்திவிடுகின்றது.

அத்துடன் இந்த தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சியை செய்வதைத் தவிர, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஒருசில உணவுகள் மற்றும் பானங்களையும் எடுக்க வேண்டும். இவற்றினை வெறும் வயிற்றில் தான் பருகவும் வேண்டும். தொப்பையைக் குறைக்கும் ஆயுர்வேத பானங்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

தொப்பையைக் குறைக்கும் பானம்
உடல் எடையையும், தொப்பையையும் குறைக்க திரிபலா மூலிகை சிறந்ததாகும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவற்றின் கலவையே திரிபலா மூலிகை ஆகும். இவை செரிமானத்தை மேம்படுத்தி, மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கவும் செய்கின்றது. தினமும் காலை வெறும்வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியை கலந்து குடித்துவிட்டு பின்பு உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையுமாம்.

ஆயுர்வேதத்தில் முக்கியமாக சேர்க்கப்படும் மற்றொரு உணவு பொருள் இஞ்சி ஆகும். இஞ்சியை தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி அதனை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், செரிமான பிரச்சினை மட்டுமின்றி தொப்பையும் குறையும்.

சமையலுக்கு அதிக மணம் சேர்க்கும் பட்டை உடல் எடையை நன்கு குறைக்கும். பட்டை பொடியை வெதுவெதுப்பான நீரில் போட்டு வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பை குறையும்.

வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்தால் கலோரிகள் குறைவதுடன், உடல் எடையும் குறையும்.

மஞ்சள் தூளை வெதுவெதுப்பான நீரிலோ அல்லது பாலிலோ கலந்து வெறும் வயிற்றில் குடித்தால், வீக்கம் குறைவதுடன், செரிமான பிரச்சினை, உடல் எடையும் குறையும்.

இதே போன்று சீரகத்தை வறுத்து சுடு தண்ணீரில் போட்டு ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் மெட்டபாலிசம் அதிகரிப்பதுடன், தொப்பையும் குறைகின்றது.

கற்றாழை ஜுஸை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருப்பதுடன், உடல் எடை மற்றும் தொப்பையும் குறையும்.

Back to top button