Fig Kheer: அத்திப்பழ கீர் செய்வது இவ்வளவு சுலபமா ?
விருந்தோம்பலில் பொதுவாக அனைவரினது வீட்டிலும் இனிப்பிற்கென்று ஒரு இடம் இருக்கும்.
அந்த வகையில் சுவையான மற்றும் ஆரோக்கியமான இனிப்புக்களை நாம் வீட்டில் செய்வது மிக சிறந்தது.
கீர் பானத்தை குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி உண்பார்கள். கீர் வகையை பல வகையாக செய்து உண்டிருப்பீர்கள், ஆனால் மருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழத்தை வைத்து செய்திருக்கிறீர்களா?
இதனை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். அதற்கான ரெசிபியை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அத்திப்பழம்- 6
பாதாம்- 4
முந்திரி- 4
குங்குமப்பூ- 1 டீஸ்பூன்
ஏலக்காய் தூள்- 1 டீஸ்பூன்
நெய்- தேவையான அளவு
பால்- 3/4 லிட்டர்
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் அத்திப்பழம், முந்திரி பருப்பு, பாதாம் போன்றவற்றை சேர்த்து ஊற வைத்து கொள்ளவும்.
பின்னர் அதை நன்றாக அரைத்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து கலந்து விட வேண்டும்.
பின்னர் பால் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து விட வேண்டும். பின்னர் ஒரு கொதி வந்தவுடன் இன்னும் கொஞ்சம் பால் பவுடர் சேர்த்து கைவிடாமல் கலந்து விட வேண்டும்.
பின்னர் அதில் ஏலக்காய் தூள், மற்றும் குங்குமப்பூ சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விட்டு இறக்கினால் சுவையான அத்திப்பழ கீர் தயார்.