இலங்கை

வவுனியாவில் நிகழ்ந்த விபத்தில் ஐவர் படுகாயம்!

வவுனியாவிலிருந்து மதவாச்சி நோக்கி தேங்காய்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பார ஊர்தி ஒன்று மூன்று பேருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதப்பெற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதற்கமைய, தேங்காய்களை ஏற்றி பயணித்த வாகன சாரதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியின் அருகே விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த இருவர் உட்பட ஜந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வவுனியா போலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button