உலகச் செய்திகள்ஏனையவை

ஜப்பானில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

நேற்று சனிக்கிழமை ஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாகவே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நரிடா விமான நிலையத்திற்கு ஜப்பான் நேரப்படி காலை 6:20 மணிக்கு ஜேர்மனியில் உள்ள ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், தான் விமானத்தில் வெடிகுண்டு வைத்ததாக அவர் கூறியதாகவும் காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி என் எச் கே செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விமானத்தில் பயணிக்க 136 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்துள்ளனர்.

தரையிறங்கிய விமானத்தை விட்டு வெளியேறும் போது குறைந்தபட்சம் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக என் எச் கே ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் என் எச் கே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button