இலங்கை
வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்: தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு
அதிகப்படியான மழை காரணமாக தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நான்கு வான்கதவுகள் நான்கு அடி உயரத்திலும், ஏனைய நான்கு வான்கதவுகள் தலா இரண்டு அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நில்வள கங்கையை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.