ஏனையவை

முதன்முறையாக விண்வெளியில் பூத்த பூ – நாசாவின் வைரல் புகைப்படங்கள்

நாசா சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதன்முறையாக பூத்த பூவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது . ரஷ்யா, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான் ஆகிய 5 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்தை உருவாக்கின. இது 1998ம் ஆண்டு முதல் புவியின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இங்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு, நீர் போன்றவற்றை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக விண்வெளி வீரர்கள் வியர்வை மற்றும் சிறுநீரில் இருந்து குடிநீரை உருவாக்கும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் வெற்றி கண்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது வி்ண்வெளி நிலையத்தில் முதன்முறையாக பூத்த பூவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது நாசா.

அத்துடன், ஜின்னியா(zinnia) செடியில் பூத்த பூவே இதுவாகும், விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பது குறித்த பரிசோதனையானது ஜெல் லிண்ட்கிரென் என்பவரால் 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கீரை, தக்காளி போன்ற காய்கறிகள் விண்வெளி மையத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலையில், ஜின்னியா செடியும் காய்கறி வளர்க்கும் இடத்தின் ஒரு பகுதியாக சுற்றுப்பாதையில் வளர்க்கப்பட்டது. இது வெறும் காட்சிக்காக மட்டும் அல்லது, சுற்றுப்பாதையில் செடிகள் எவ்வாறு வளர்கின்றன என்பது குறித்தும் அறிந்து கொள்ள உதவும், இந்த பூவானது வெளிர் ஆரஞ்சு நிற இதழ்களை கொண்டுள்ளது. நாசா பகிர்ந்த இப்புகைப்படங்கள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Back to top button