உடல்நலம்
கர்ப்பகாலத்தில் போலிக் ஆசிட் மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்| Folic Acid Tablets Uses in Tamil

போலிக் ஆசிட் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
போலிக் ஆசிட் என்பது ஒரு வகையான வைட்டமின் பி சத்து ஆகும். இது உடம்பில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அவசியமானதாகும்.
போலிக் ஆசிட் மாத்திரையின் பயன்கள்:
- மகப்பேறு அடைவதற்கும், மகப்பேறு அடைந்த பெண்களுக்கு கரு வளர்ச்சி நன்றாக இருப்பதற்கும் உதவுகிறது.
- பெண்களுக்கு வைட்டமின் பி குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை பிரச்சனைகளுக்கும், மகப்பேறு பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.
- கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கும், பெண்களுக்கு உடம்பில் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதற்கும் போலிக் ஆசிட் மிகவும் முக்கியம்.
- மாதவிடாய் சரியாக வராமல் இருக்கும் பெண்கள் பயன்படுத்தலாம்.
- இரத்த சோகை உள்ளவர்களும் சாப்பிடலாம்.
போலிக் ஆசிட் அதிகம் உள்ள உணவுகள்:
- காய்கறிகள், பசலைக்கீரை, பீன்ஸ், ப்ரோக்கோலி, பப்பாளி, ஆரஞ்சு, ஈஸ்ட், முருங்கை கீரை, முளைக்கட்டிய பயறு, பச்சை பட்டாணி, வாழை, முழு தானியங்கள், ரொட்டி, பாஸ்தா, அரிசி, கறி
போலிக் ஆசிட் மாத்திரை பக்க விளைவுகள்:
- காய்ச்சல், குமட்டல், வயிற்று வீக்கம், எரிச்சல்
- மண சோர்வு, அலர்ஜி, உலர்ந்த வாய், தோல் சிவந்து போதல், தோல் அரிப்பு
போலிக் ஆசிட் மாத்திரை யார் சாப்பிடலாம்?
- கர்ப்பிணி பெண்கள்
- மகப்பேறு அடைவதற்கு முயற்சிக்கும் பெண்கள்
- குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள்
முக்கிய குறிப்புகள்:
- இதயநோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்த வேண்டாம்.
- மருத்துவர் எந்த அளவு டோஸேஜ் உள்ள மாத்திரையை பரிந்துரை செய்கிறாரோ அந்த அளவு எடுத்து கொள்வது நல்லது.