பெப்ரவரி 6ஆம் திகதி முதல்… பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோருக்கு கூடுதலாக ஒரு சுமை
பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோருக்கான மருத்துவ உப கட்டணம், பிப்ரவரி மாதம் 6ஆம் திகதி முதல், அதிகரிக்க உள்ளது. பிரித்தானியா, (2024ஆம் ஆண்டு) ஜனவரி மாதம் 15ஆம் திகதி கொண்டு வந்த புதிய சட்டம் ஒன்றின்கீழ், பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோருக்கான மருத்துவ உப கட்டணம் அதிகரிக்க உள்ளது.
அந்த சட்டத்தின்படி, பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோர், மருத்துவ உப கட்டணமாக ஆண்டொன்றிற்கு இனி 1,035 பவுண்டுகள் செலுத்தவேண்டும். இந்த கட்டணம் தற்போது 624 பவுண்டுகளாக உள்ள நிலையில், இம்மாதம் 6ஆம் திகதியிலிருந்து இந்த கட்டண உயர்வு அமுலுக்கு வருகிறது.
அதேபோல, 18 வயதுக்குக் குறைவான மாணவர்கள் தற்போது 470 பவுண்டுகள் கட்டணம் செலுத்தும் நிலையில், பிப்ரவரி 6 முதல் அது ஆண்டுக்கு 776 பவுண்டுகளாக உயர உள்ளது. இது, தற்போதுள்ள கட்டணத்தைவிட 65 சதவிகித அதிகரிப்பு ஆகும். பிரித்தானியாவுக்கு புலம்பெயர விண்ணப்பம் செலுத்தும்போதே இந்தக் கட்டணத்தையும் புலம்பெயர்வோர் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.