அக்டோபர் 18 முதல் சூரியனின் ராசி மாற்றத்தால் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க போகும் 3 ராசிக்காரர்கள்
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியனின் ராசி மாற்றம் ஒவ்வொரு மாதமும் நிகழ்வதுண்டு. அப்படி சூரியன் தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதோடு சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் அக்டோபர் 18 ஆம் திகதி துலாம் ராசிக்குள் நுழைகிறார். சூரியன் துலாம் ராசிக்குள் நுழைவதால் ஐப்பசி மாதம் பிறக்கிறது. இந்த ஐப்பசி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஒருசில மாற்றங்கள் ஏற்படும். துலாம் ராசிக்கு சூரியன் செல்வதால் இக்காலத்தில் சூரியன் சற்று பலவீனமாக இருப்பார். அதோடு பலவீனமாக சூரியன் இருப்பதால் சில ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திப்பதோடு, பண இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. இப்போது சூரியன் துலாம் ராசிக்கு செல்வதால், எந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம் மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் அக்டோபர் 18 முதல் மேஷ ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்காது. இதனால் நீங்கள் சற்று வருத்தப்படக்கூடும் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். அலுலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை புறக்கணிப்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும். வணிகர்களால் போதுமான லாபத்தைப் பெற முடியாது. கூட்டு தொழில் செய்பவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
மிதுனம் மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் உடல் மற்றும் மன ரீதியாக மிகுந்த அழுத்தத்தை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் அதுவே மன அழுத்தத்தை அதிகரித்து, ஆரோக்கியத்தை மோசமாக பாதித்துவிடும். வியாபாரம் செய்பவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைத்தால், அதை இக்காலத்தில் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிக உள்ளன.
ரிஷபம் ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகலாம். பணியிடத்தில் உங்களின் வேலையில் நிறைய இடையூறுகளை சந்திக்க நேரிடும். புதிய வேலையைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, இக்காலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். பிரச்சனைகள் அல்லது ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதனாலேயே பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.