உடல் எடை இழப்பு முதல் நீளமாக முடி வளர இந்த ஒரு டீ போதும்: ஆயுர்வேதத்தின் கூற்று
நெல்லிக்காய் ஆயுர்வேதத்தின் முக்கியமான ஒரு மூலிகையாகும். இது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்துகிறது. நெல்லிக்காய் டீ குடிப்பதனால் உடல் எடையை குறைக்கவும், உடலில் தொற்றுகள் பரவாமல் தடுக்கவும், முடியின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. இந்த ஆரோக்கியமான நெல்லிக்காய் டீ எப்படி தயாரிப்பது என்றும், அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பற்றியும் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெல்லிப்பொடி – 1 ஸ்பூன்
இஞ்சி- சிறிய துண்டு
தேன்- 2 ஸ்பூன்
மிளகு தூள்- 1/4 ஸ்பூன்
தண்ணீர்- 2 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் இஞ்சியை துருவி சேர்த்துக்கொள்ளவும்.
அடுத்து அதில் நெல்லிக்காய் பொடி சேர்த்து நன்கு 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
பின் இதை வடிகட்டி அதில் மிளகு தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தேன் சேர்க்க கூடாது.
இறுதியாக விரும்பினால் துளசி, புதினா இலைகள் சேர்த்து குடிக்கலாம்.
கிடைக்கும் பலன்கள்
நெல்லிப்பொடியில் உள்ள நார்ச்சத்து குடல் மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இதனால் எடை கட்டுக்குள் வைக்கிறது.
உடலில் இரத்த சர்க்கரை அளவி சமநிலைப்படுத்தும் குரோமியம் இதில் உள்ளதால் குளுக்கோஸ் அளவை திறம்பட கட்டுப்படுத்துகிறது. மேலும் இது ரத்த சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது.
வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும் போது இது அதிக கலோரிகளை திறம்பட எரிக்கிறது மேலும் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்கிறது.
உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குகிறது. இதனால் உடல் ஆற்றலுடன் இயங்க செய்கிறது. உடல் எடையை வேகமாக குறைக்க செய்கிறது.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி தொற்றுநோய்களை எதிர்க்கிறது. மேலும் மார்பு நெரிசலை தடுக்கிறது, இரத்தத்தை சுத்திகரிக்க செய்கிறது, கண் பார்வையை மேம்படுத்துகிறது.
நெல்லிக்காய் முடி உதிர்வை தடுக்கிறது மற்றும் முடி நரைப்பதை தாமதப்படுத்துகிறது. மேலும் உச்சந்தலையின் மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது, சருமத்தை நீரேற்றமாக வைக்கவும் பயன்படுகிறது.