உடல்நலம்

வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கலை குறைக்கும் பழங்கள்

பொதுவாக தற்போது இருப்பவர்கள் வெளியில் செல்லும் போது கண்ணில் என்னென்ன உணவுகள் படுகின்றதோ அதனை வாங்கி உண்பார்கள். பின்னர் அதிக எடை, சோர்வு, செரிமான கோளாறு, மலச்சிக்கல், வாந்தி போன்ற பிரச்சினைகளால் அவஸ்தைப்படுவார்கள்.

சில உணவுகள் வெளியேற வழியில்லாமல் வயிற்றிலேயே தங்கி விடுகின்றன, இதனால் வாயு தொல்லை மற்றும் வயிறு வீக்கம் ஆகிய பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது.

அந்த வகையில், இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் பழங்களை கொண்டு அதனை சரிசெய்யலாம். அப்படியான பழங்கள் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

மலச்சிக்கலுக்கு நிவாரணம்

  1. வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் பப்பாளி பழம் சாப்பிடுவது சிறந்தது. ஏனெனின் பப்பாளியில் “பாப்பேன்” (Papain) எனும் என்சைம் இருக்கின்றது. இது செரிமானத்தை சீர்ப்படுத்தி வயிற்றை சுத்தப்படுத்தும்.
  2. ஆப்பிளில் பெக்டீன் எனும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் வயிற்றில் ஏதாவது கோளாறு ஏற்படும் போது ஆப்பிள் பழத்தை சாப்பிடலாம்.
  3. செரிமான கோளாறுகள் ஏற்படும் போது ஆரஞ்சி பழத்தை சாப்பிடலாம். இது குடலில் இருக்கும் அசுத்த கழிவுகளை அகற்றி வயிற்றை சுத்தப்படுத்துகின்றது.
  1. ஃபைபர், பிரக்டோஸ், சார்பிடால் போன்ற கூறுகள் கொய்யாப்பழத்தில் அதிகமாக உள்ளது. செரிமான கோளாறு, மலச்சிக்கல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படும் போது கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்.
  2. கிவி பழத்தில் நார்ச்சத்து நினைப்பதற்கு அதிகமாகவே இருக்கின்றன. மலச்சிக்கலுக்கு நிவாரணம் கொடுப்பது மட்டுமல்லாது கிவியில் இருக்கும் ஆக்டினிடின் எனும் என்சைம் குடலை சுத்தம் செய்யும் வேலையையும் பார்க்கிறது.

Back to top button