ஆன்மிகம்

சந்திரன் கொடுக்கபோகும் கஜகேசரி யோகம்! பேரதிர்ஷ்டம் எந்த ராசிக்கு?

ஜோதிட நிலையால் சில கிரகங்களின் இடப்பெயர்ச்சி மூலம் சில ராசிகள் அதற்குரிய பலனை அனுபவிக்கிறது.

இதன் காரணமாக ஒரு சில ராசிகள் நல்லதையும் இன்னும் சில ராசிகள் தீமையையும் அனுபவிக்கின்றன.

அந்த வகையில் இந்த மாசி மாதம் 14 ம் திகதி சந்திரன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளதால் இங்கு கஜகேசரி யோகம் உண்டாகிறது.

இந்த யோகத்தின் மூலம் மங்களகரமான தாக்கம் உண்டாகின்றதால், மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிகளுக்கு கிடைக்கபோகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த ராசியில் தான் முதலில் கஜகேசரி யோகம் உண்டாகிறது, ஆகவே உங்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

உங்களின் பேச்சு மற்றவர்களுக்கு இனிமையாக இருக்கும். நீங்கள் செய்யும் செயலால் நல்ல பெயரை வாங்குவீர்கள். உங்கள் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

நட்பும் பாசமும் அதிகமாக இருக்கும். முதலீடு செய்தால் உங்களுக்கு பிடித்த வகையில் லாபம் இருக்கும்.

மிதுனம்

உங்களது ராசியில் 11 ம் இடத்தில் கஜகேசரி யோகம் சஞ்சாரம் செய்கின்றது. இதன் காரணமாக தொழிலில் முன்னனேற்றத்துடன் செய்ல்படுவீர்கள்.

இதுவரைக்கும் இருந்த பிரச்சனைகள் எல்லாம் இந்த கால கட்டத்தில் முடியும். மாணவர்கள் படிப்பில் கெட்டிகாரராக இருப்பார்கள்.

கணவன் மனைவி ஒற்றுமையுடன் இருப்பீர்கள். வணிகம் செய்பவர்கள் அதில் நல்ல லாபம் எடுப்பீர்கள்.

தனுசு

உங்கள் ராசியில் கஜகேசரி யோகம் 5ம் வீட்டில் உண்டாகின்றதால் இந்த ராசிகாரர்களுக்கு பொருளாதாரம் என்பது நல்ல முன்னேற்றத்துடன் துலங்கும்.

குடும்பத்தில் உள்ளவர்களுடனாக பிரச்சனைகள் யாவும் நீங்கும். இன்னும் முடிவிற்கு வராத வேலைகள் முடிவிற்கு வரும். உங்கள் உடல் நலம் மேன்மையாக இருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் என்பது ஓரளவு கிடைக்கும்.

Back to top button