ஆன்மிகம்

12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் கஜலக்ஷ்மி ராஜயோகம்

சுக்கிரன் மற்றும் குரு சேர்ந்து உருவாக்கக்கூடிய யோகம் கஜலட்சுமி ராஜ யோகம்.

இதன் மூலம் சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தையும், மகத்தான பலனை , 4 ராசியினருக்கு கிடைக்க உள்ளது.

எதிர்வரும் (01.05.2024) திகதி குரு பகவான் மேஷத்திலிருந்து ரிஷபத்திற்கு மாறுகிறார்.

அதற்கு முன் (24.04.2024) ஆம் திகதி சுக்கிரன் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

பின்னர் குரு பெயர்ச்சி ஆன பின்னர் மே 19ம் தேதி சுக்கிரன் ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆகி இரு கிரகங்களும் சேர்ந்து சஞ்சாரம் செய்ய உள்ளனர்.

கடகம்
கஜலக்ஷ்மி ராஜயோகம் மூலம் கடக ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் மிகவும் சாதகமான பலன் தரும்.

உங்களின் திட்டமிடல் சிறப்பாகவும். அதன் மூலம் நல்ல வெற்றியும், செல்வ செழிப்பையும் அடைய முடியும்.

கடக ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும் மற்றும் புதிய ஒப்பந்தங்களின் மூலம் லாபம் ஈட்டலாம்.

உங்கள் குழந்தைகள் அல்லது குடும்பத்தினரிடம் செயல்பாடு மகிழ்ச்சியையும், நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம்.

மாணவர்களுக்கு, போட்டித் தேர்வுகளில் நல்ல முடிவுகளைப் பெற சிறந்த காலமாக இருக்கும். அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

பயணங்கள் மகிழ்ச்சியை தரும். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறந்த விளைவுகளை எதிர்பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு, கஜலக்ஷ்மி ராஜயோகம் தொழில், வளர்ச்சிக்கு சிறந்த காலமாக இருக்கும்.

இந்த யோகத்தின் மூலம் ஒரு புதிய வேலை, தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதில் வெற்றிக்கான வாய்ப்புகள் மிகவும் முக்கியத்துவம் இருக்கும்.

உங்களுக்கு வந்து சேர வேண்டிய பனம் உங்களுக்கு வந்து சேர வாய்ப்புள்ளது.

பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து லாபம் ஈட்ட சிறந்த நேரமாக அமையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கஜலக்ஷ்மி ராஜயோகம் மிகவும் சாதகமானது.

நீங்கள் செய்யக்கூடிய தொழில் விஷத்தில் மேன்மை உண்டாகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

வாழ்க்கையில் தைரியமாக முடிவெடுக்க முடியும். பல துறை வித்தகராகச் செயல்படலாம்.

வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பங்குச் சந்தையில் லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. உங்கள் முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு உடல்நலக் கவலைகள் இருக்காது மற்றும் சுகாதார செலவுகள் குறைவாகவே இருக்கும்.

Back to top button