இலங்கை
எரிவாயு விலை மீண்டும் குறைப்பு!

எரிவாயுவின் விலை இன்னும் அடுத்து வரும் சில தினங்களில் குறையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தள்ளார். நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.